FLASH

Arunagirinathar verses refer to Mayilapur in 15th century

Updated by admin on Thursday, October 15, 2020 04:52 PM IST

Chennai: Chennai 2000 Plus Trust brings you verses from Thiruppugazh by saint Arunagirinathar in the 15th century. These verses (two in this the first report) refer to Mayilapur Kapaleeswarar temple and also mention that it is located close to the sea. The original Kapaleeswarar temple was right next to the sea.
Historians and  archaeologists have made out a case that the present day temple was a later period construction as the original temple was submerged by the sea and/or damaged by invaders like the Portuguese. British and French.

We also herewith provide you the verses in music form (audio) for greater enjoyment as part of the Chennai Maadham events.  

THIRUMAYILAI:
 
1. பாடல் .........அமரும் அமரரினில் அதிகன்:
அமரு மமரரினி லதிக னயனுமரி  .யவரும் வெருவவரு ...... மதிகாளம்
அதனை யதகரண விதன பரிபுரண   மமைய னவர்கரண ...... அகிலேச
நிமிர வருள்சரண நிபிட மதெனவுன      நிமிர சமிரமய ...... நியமாய
நிமிட மதனிலுண வலசி வசுதவர      நினது பதவிதர ...... வருவாயே
 
சமர சமரசுர அசுர விதரபர      சரத விரதஅயில் ...... விடுவோனே
தகுர்த தகுர்ததிகு திகுர்த திகுர்ததிகு      தரர ரரரரிரி ...... தகுர்தாத
எமர நடனவித மயிலின் முதுகில்வரு     மிமைய மகள்குமர ...... எமதீச
இயலி னியல் மயிலை நகரி லினிதுறையு      மெமது பரகுரவ ...... பெருமாளே.
 
......... சொல் விளக்கம் .........
 
அமரும் அமரரினில் அதிகன் --. சிறந்த தேவர்களில் மேம்பட்டவனான இந்திரன்,
அயனும் அரியவரும் வெருவ வரும் -- பிரம்மா, திருமால் ஆகியோர் அஞ்சும்படி வந்த
அதிகாளம் அதனை -- ஆலகால விஷத்தினை (அடக்குவதற்காக)
அதகரண விதன --- மனச் சஞ்சலத்தை ஹதம் செய்பவனே,
பரிபுரணமமை அ(ன்)னவர்கரண ----சிந்தை நிறைந்த சாந்தர் மனத்தில் இருப்பவனே,
 
அகிலேச ---.. அகில உலகிற்கும் ஈசனே,
நிமிர வருள்சரண .-----.. எம் தாழ்வு நீங்கி யாம் நிமிர்ந்திட உன் திருவடி அருளவேண்டும்,
நிபிடம் அது என .-----(அவ்விஷம்) எம்மை நெருங்கி வருகிறது,
என்றெல்லாம் எல்லா தேவர்களும் முறையிட,
உன நிமிர ----. நினைக்கின்ற மாத்திரத்திலேயே,
சமிரமய .----. வாயு வேகத்தில்,
நியமாய .------ (சரணடைந்தவர்களைக் காப்பதுதான்) கடமையென்று
நிமிடமதனில் உணவல -----. நிமிஷ நேரத்தில் (அந்த விஷத்தை) உண்டருளிய
சிவசுதவர ----. சிவனுடைய சிரேஷ்டமான குமாரனே,
நினது பதவிதர வருவாயே .-------. உனது குகசாயுஜ்ய பதவியைத் தந்திட
வரவேண்டும்.
 
சமரச அமர சுர ----- ஒற்றுமையான பெருந்தன்மையுள்ள தேவர்களுக்கு
விதரபர அசுர .-----. பகைவர்களாகிய அசுரர்கள் மேல்
சரத விரதஅயில் விடுவோனே -----. சத்தியமான ஆக்ஞாசக்தி வேலை
விடுவோனே,
தகுர்த தகுர்ததிகு திகுர்த திகுர்ததிகு தரர ரரரரிரி தகுர்தாத ...(என்னும் அதே ஒலியில்)
எமர நடனவித -----. (முருகன் அடியாராகிய) எம்மவருக்கு ஏற்ற நடனவகைகள் செய்யும்
மயிலின் முதுகில்வரும் ---- மயிலின் முதுகின் மேல் வருகின்றவனே,
இமைய மகள்குமர எமதீச  -----. இமயராஜன் மகள் பார்வதி பெற்ற குமரா, எம் இறைவனே,
இயலி னியல் .---- தகுதி வாய்ந்துள்ள
மயிலை நகரில் இனிதுறையும் .----- திருமயிலை* நகரிலே இன்பமாக வாழும்
எமது பரகுரவ பெருமாளே. ------ எங்கள் மேலான குருதேவப் பெருமாளே.
 
* திருமயிலை (மயிலாப்பூர்) தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையின் மையத்தில் இருக்கிறது.
........ Meaning .........
IndrA, the Chief of the Celestials, BrahmA, Vishnu and others were scared when the deadly poison came (out of the milky ocean).
(To escape the poison, they prayed) - "Oh Destroyer of our mental agony,
You reside in the serene hearts of people who possess complete tranquility, Oh Lord of this Universe;
To help us to rise on our feet, You must grant us Your holy feet; and
the poison is closing in on us" (- so all DEvAs prayed to Lord SivA).
When their pleas reached Him, with the speed of whirlwind,
and vowing to protect those who surrendered, in just a moment,
SivA swallowed that poison!
You are that SivA's great son!
You must come to take us into Your fold in Your Great Kingdom!
At the asuras who were enemies of the pious DEvAs
You threw the powerful Spear which is a symbol of truth!
தகுர்த தகுர்ததிகு திகுர்த திகுர்ததிகு தரர ரரரரிரி தகுர்தாத (To the sound of the same meter)
Your Peacock dances to please us, Your devotees, in many ways, and You go about mounted on the Peacock.
You are our Lord Kumaresa, son of PArvathi, who Herself is the daughter o King HimavAn.
Your cosy residence is in the most fitting place, Thirumayilai* and
You are our Supreme Master, Oh Great One!
Thirumayilai is Mayilapur, in the heart of the city of Chennai.
 
MP 3 திருப்புகழ் 688 (213) அமரும் அமரர்
(திருமயிலை)
ராகம்: ராமப்ரியா
தாளம்: ஆதி
 
2. பாடல் .........அயில் ஒத்து எழும் இரு விழியாலே
 
அயிலொத் தெழுமிரு .. விழியாலே
அமுதொத் திடுமரு ..... மொழியாலே
சயிலத் தெழுதுணை .... முலையாலே
தடையுற் றடியனு ... மடிவேனோ
 
கயிலைப் பதியரன் ... முருகோனே
கடலக் கரைதிரை .. யருகேசூழ்
மயிலைப் பதிதனி . லுறைவோனே
 
மகிமைக் கடியவர் . பெருமாளே.

......... சொல் விளக்கம் .........
அயில் ஒத்து எழும் இரு விழியாலே .-------வேலை நிகர்த்து எழுந்துள்ள இரண்டு கண்களாலும்,
அமுது ஒத்திடும் அரு மொழியாலே .------அமுதத்துக்கு ஒப்பான அருமையான பேச்சினாலும்,
சயிலத்து எழு துணை முலையாலே .------- மலைக்கு இணையாக எழுந்துள்ள இரு மார்பகங்களாலும்,
தடையுற்று அடியனு(ம்) மடிவேனோ .------ வாழ்க்கை தடைப்பட்டு, அடியேனும் இறந்து படுவேனோ?
 
கயிலைப் பதி அரன் முருகோனே -----கயிலைப்பதியில் வீற்றிருக்கு சிவபிரானின் குழந்தை முருகனே,
கடல் அக் கரை திரையருகே சூழ் .----கடலின் கரையும், அலையும் அருகிலே சூழ்ந்திருக்கும்
மயிலைப் பதிதனில் உறைவோனே ------திருமயிலைப்பதியில்*வீற்றிருப்பவனே,
மகிமைக்கு அடியவர் பெருமாளே. -----பெருமை பொருந்திய அடியவர்களின் பெருமாளே.
 
* திருமயிலை (மயிலாப்பூர்) தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையின் மையத்தில் இருக்கிறது.
Meaning .........
Because of the two eyes that rise like spear,
because of the sweet talk like nectar,
and because of the twin bosom that swell like mounts,
is my life to be cut short, and am I destined to die?
 
Oh MurugA! You are the child of Lord SivA who has His abode in Mount KailAsh!
You have Your seat in Thirumayilai* adjacent to the sea shore and the waves!
You are the Lord of all illustrious devotees, Oh Great One!
* Thirumayilai is Mayilapur, in the heart of Chennai.

ராகம்:  காம்போதி
தாளம்:  ஆதி

Songs, lyrics and meaning:  courtesy koumaram.com, Sri Maha Periyava Thirupugazh Sabha and Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem), Singer  சீதாலக்ஷ்மி ராதாகிருஷ்ணன் (Seethalakshmi Radhakrishnan) for contributing their recordings.

Those who wish to join Chennai 2000 Plus Trust and its whatsapp group and take part in its live events, can send messages to  9841010821, giving name, address, mobile number and email id. There is no admission fee.

By R. Rangaraj, President, Chennai 2000 Plus Trust 9841010821 rangaraj2022@yahoo.com, chennai2000plus@yahoo.com

COMMENTS

comments powered by Disqus

PHOTOS

  • Kadir Srishti Dange in Sathru stills

  • Vijay Sethupathy stills

  • Trisha stills

  • Aruva Sandai stills

  • Actress Aishwarya Dutta Stills

  • KOOTHAN movie pooja

  • Munnodi movie Stills

  • Silanth 2 Movie Stills

  • Thanga Radham

  • URU first look poster

VIDEOS

  • Interview R Rangaraj on TN Assembly returns to Kalaivanar Arangam after 65 years

  • Video interview TN Assembly returns to Kalaivanar Arangam after 65 years

  • TN Assembly returns to Kalaivanar Arangam after 65 years

  • Gif and First Look of KEE Movie

  • Rajinikanth in Kaala first look

  • Nibunan Teaser