Sunday, October 3, 2021,
                            Chennai
                        
                            பண்டைய நாளில் உலகில் மனிதன் வாழ்ந்திருந்தான் என்பதற்கான அடையாளமாகத் திகழ்பவை அவன் பயன்படுத்தி விட்டு சென்ற பொருட்களே ஆகும். குறிப்பாக பழங்கற்காலத்தில் அவர்கள் பயன்படுத்திவிட்டுச் சென்ற கல்லாயுதங்கள் மூலம் தொல்பழங்கற் காலத்தில் அவர்களது வாழ்க்கை முறையை அறியமுடிகிறது. இத்தகைய  கற்கால மனிதர்கள் திருவள்ளூர் மாவட்டத்தில் வாழ்ந்திருந்தனர் என்பதற்கானத் தடயங்களான கருவிகள் அதிக அளவில் கிடைத்துள்ளன என்று தொல்லியல்த்துறை மேனாள் ஆணையர் (பொறுப்பு) முனைவர் சீ. வசந்தி  கூறுகிறார்.