FLASH

Heritage Walk to Pamban Swamigal Jeeva Samadhi

Updated by admin on Wednesday, November 11, 2015 05:10 PM IST

Chennai: Pamban Gurudasa Swamigal (1850 – May 30, 1929 ), popularly known as Pamban Swamigal, was a Saivite saint and poet. He was a devotee of the Hindu god Murugan and composed and wrote poems in his praise. His samadhi is located at Tiruvanmiyur, Chennai.

In the year 1850 a child was born to a Saivite family in the town of Pamban in Pamban Island which then formed part of the Ramnad estate. The child was named Appāvu but later became known as Pamban Swami as he had lived and left his family at Pamban Island. A psychic predicted that Appāvu would be great man of words and wisdom. In his school days, Appāvu was very good in his studies and other activities and ranked high in Tamil and English.

At the age of thirteen, on a Friday at sunrise Appāvu had a vision and was induced to write poems on Lord Kumāraguru, which he wrote immediately on a palm leaf in a facile pen in his coconut estate. He wrote one poem each day before his lunch for 100 days, ending each decad with his manasika guru's name Arunagiri Nāthar. After seeing Appāvu's poem, a temple priest named Seddu Madhava Iyer marveled at the young boy's knowledge of Tamil and his faith in Lord Murugan. Later Appāvu was given upadesam on the holy six-letter mantra on Vijaya Dasami day at Agni Tīrtham by the Rameswaram seashore temple and was made to read Sanskrit by Seddu Madhava Iyer.

Pamban Swami wrote 6,666 poems, 32 viyasams and 1000 names of Lord Murugan. He composed poems on Lord Kumara in more than 130 different forms as per Tamil grammar. Pamban Swami always liked to do silent Akā Pūja rather than audible pūja. He attained Samadhi at Thiruvanmiyur near the Marundheeswarar Temple on May 30, 1929.

பாம்பன் சுவாமிகள் சிறப்பு நிகழ்ச்சி, நடைபயணம்

ஒக்டோபர் 27 அன்று  திருவான்மியூர் பேருந்து நிலையம் அருகிலிருந்து பாம்பன் சுவாமிகள் கோவில் ஜீவ சமாதிவிற்கு ஒரு நடைபயணம் நடைபெற்றது. 

திருவான்மியூர் வடக்கு மாட வீதியிலிருந்து தொடங்கி, பாம்பன் ஜீவ சமாதியை நடைபயணம் சென்றடைந்தது. பிறகு பக்தர்கள் திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில்வரை நடைபயணம் மேற்கொண்டனர். மருந்தீஸ்வரர் கோவிலில் திரு திருப்புகழ் மதிவண்ணன் பாம்பன் குமரகுருதாச சுவாமிகளைப் பற்றி ஒரு சிறப்பு சொற்பழிவை நடத்தினார்.

ஏராளமான பக்தர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர் என சென்னை 2000 + அறக்கட்டளையின் தலைவர் திரு ஆர் ரங்கராஜ் தெருவித்தார். இந்நிகழ்சிகளை சென்னை 2000 + மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனமும் இனைந்து நடத்தினர். 

பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் (பி.1850,இ.மே 30,1929) தமிழ்நாட்டில் இராமேசுவரம் தீவில் அமைந்துள்ள பாம்பன் என்ற ஊரில் பிறந்த வடமொழி, தென்மொழி இரண்டிலும் புலமைபெற்று ஆறுமுகனை வழிபட்டு வந்த ஓர் தமிழ்த்துறவி ஆவார். 

தனது வாழ்நாள் முழுவதும் தமிழுக்கும் சைவ நெறியாகிய குகப்ரம்ம நெறிக்கும் தனது பாடல்களாலும், சாத்திரங்களாலும் தொண்டாற்றினார். முருகனின் வழிபாடாக இவர் இயற்றிய பாடல்கள் 6666. இவை ஆறு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவரியற்றிய சண்முக கவசம் புகழ்பெற்றது. பாம்பன் சுவாமிகள் மே 30, 1929

அன்று சமாதி அடைந்தார். அவரது சமாதி கோவில் சென்னை, திருவான்மியூரில் உள்ளது.

வாழ்க்கைக் குறிப்பு

பழந்தமிழ்க் குடியான அகம்படியர் குடியில் சாத்தப்பப் பிள்ளை என்பாருக்கும் செங்கமலம் என்பாருக்கும் மகனாக தோராயமாக 1850 ஆம் ஆண்டு இராமேசுவரத்தை அடுத்த பாம்பனில் பிறந்தார். இவரது இயற்பெயர் அப்பாவு என்பதாகும். 1866 ஆம் ஆண்டு உள்ளூர் கிருத்துவப் பள்ளியில் பயின்றார். முனியாண்டிப் பிள்ளை என்பாரிடம் தமிழ் கற்றார். சிறுவயதில் இவருக்கு கந்தர் சட்டிக் கவசம் மிகவும் ஈர்த்த நூலாகும். இதுவே இவர் பின்னாளில் சண்முக கவசம் இயற்ற தூண்டுதலாக இருந்தது. சேது மாதவ அய்யர் என்பாரிடம் வடமொழியும் கற்கலானார்.

தமது 12,13 வயதிலேயே கவிபாடும் திறமை பெற்றிருந்தார். இவருடைய முதல் பாடல் ஆசுகவியாக உருவாகிய "கங்கையைச் சடையில் பதித்து" எனத் தொடங்குவது.

அருணகிரிநாதரை ஞானகுருவாகக் கொண்ட இவர் பின்னாளில் ’உபய அருணகிரிநாதர்’ என்ற பெயரும் பெற்றார்.
இவருக்கு அகவை 25ஐ எட்டிய பொழுது மதுரை சின்னக் கண்ணு பிள்ளை மகளாகிய காளிமுத்தம்மாளை 1878ஆம் ஆண்டு வைகாசித்திங்களில் இராமநாதபுரத்தில் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு முருகையபிள்ளை, சிவஞானாம்பாள், குமரகுருதாச பிள்ளை என மூன்று மகவுகள் பிறந்தனர்.
1894ஆம் ஆண்டு இராமநாதபுரத்திலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிரப்பன்வலசை என்ற ஊரில் நிட்டையில் இறங்கினார். 35 நாட்கள் அருந்தவம் புரிந்த நிலையில் இவருக்கு முருகப் பெருமானே உபதேசம் நல்கியதாக இவரது சீடர்கள் நம்புகின்றனர். இவரது கனவுகளில் முருகன் வழிநடத்துவதாகவும் அவர்கள்
நம்புகின்றனர். இவ்வாறான வழிகாட்டலில் அவர் சென்னை சென்றார். அங்கிருந்து பல தலங்களுக்கு சமயப்பயணங்கள் மேற்கொண்டார். அப்போது அவருடன் பழகிய திரு. வி. க இவ்வாறு கூறுவார்:

"குமரகுரு திருவல்லிக்கேணியில் தங்கியிருந்தபோது நாடோறும் மாலை வேளையில் கடற்கரை செல்வர். அவருடன் யானும் போவேன். அடிகள் வடமொழி உபநிடதக் கருத்துக்களைத் தமிழில் விளக்குவர். சாத்திர நுட்பங்களை எளிதில் வெளியிடுவர்" திரு.வி.க.வாழ்க்கை குறிப்பு பக்கம் 127.

1923ஆம் ஆண்டு திசம்பர் 27 அன்று சென்னை தம்பு செட்டி வீதியில் சென்று கொண்டிருந்த சுவாமிகள் மீது, குதிரை வண்டிச் சக்கரம் இடது கணைக்கால் மீது ஏறியதால் கால் எலும்பு முறிந்து சுவாமிகள் பொதுமருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். இந்த விபத்து நடந்த போது பாம்பன் சுவாமிகளின் வயது 73.ஆங்கிலேய மருத்துவர்களால் குணமடைவது கடினம் என்று கூறி கைவிடப்பட்டார்.அங்கு தொடர்ந்த சண்முகக் கவசம் பாடிவந்தமையால் மயில் வாகனத்தில் வந்த முருகன் அருளால் கால் எலும்பு சேர்ந்ததால் அந்நாள் மயூர சேவன விழா என ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் சிறப்பாக நடைபெறுகிறது.சென்னை மருத்துவமனையில் "மன்ரோ வார்டில்" பாம்பன் சுவாமிகளின் திருவுருவப்படம் மாட்டப்பட்டு நோயாளிகளால் வழிபடப்படுகிறார்.

1926 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17 அன்று உயில் எழுதி மகா தேஜோ மண்டலசபை அமைப்பு நடைமுறையை ஏற்படுத்தினார்.

மே 30 , 1929 அன்று காலை 7.15 மணிக்குச் சுவாமிகள் சமாதியடைந்தார்கள். சுவாமிகள் திருமேனி அலங்கரிக்கப்பட்ட புஷ்பவிமானத்தில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு மே 31 , 1929 திருவான்மியூரில் சமாதி அமைக்கப்பட்டது.

COMMENTS

comments powered by Disqus

PHOTOS

  • Kadir Srishti Dange in Sathru stills

  • Vijay Sethupathy stills

  • Trisha stills

  • Aruva Sandai stills

  • Actress Aishwarya Dutta Stills

  • KOOTHAN movie pooja

  • Munnodi movie Stills

  • Silanth 2 Movie Stills

  • Thanga Radham

  • URU first look poster

VIDEOS

  • Interview R Rangaraj on TN Assembly returns to Kalaivanar Arangam after 65 years

  • Video interview TN Assembly returns to Kalaivanar Arangam after 65 years

  • TN Assembly returns to Kalaivanar Arangam after 65 years

  • Gif and First Look of KEE Movie

  • Rajinikanth in Kaala first look

  • Nibunan Teaser